அதிக தண்டால் எடுத்து தமிழ் வாலிபர் கின்னஸ் சாதனை


செபாஸ்டின்
x
செபாஸ்டின்
தினத்தந்தி 9 April 2022 8:14 PM IST (Updated: 9 April 2022 8:14 PM IST)
t-max-icont-min-icon

ஒரு நிமிடத்தில் அதிக தண்டால் எடுத்து தமிழ் வாலிபர் சாதனை படைத்துள்ளார்.

மும்பை, 
 நவிமும்பை சான்பாடா, கைலாஷ் சதன் பகுதியில் வசித்து வருபவர் மரிய ஞானம் நாடார். இவரது மகன் செபாஸ்டின். இவருக்கு சிறுவயதில் இருந்தே உடற்பயிற்சியில் அதிக ஈடுபாடு உண்டு. எப்போதும் உடலை கட்டுகோப்பாக வைத்திருப்பதில் ஆர்வம் காட்டுவார். இந்தநிலையில் அவர் ஒரு நிமிடங்களில் 68 ஹேண்டு ரிலீஸ் புஷ்-அப்ஸ் (தண்டால்) எடுத்து கின்னஸ் சாதனை படைத்து உள்ளார். 
 அவரது சாதனையை பாராட்டி கின்னஸ் சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 

Next Story