கறிக்கோழிகள் இறப்பை தடுக்க பண்ணை உரிமையாளர்கள் புதிய முயற்சி
சுல்தான்பேட்டை பகுதியில் கொளுத்தும் வெயில் காரணமாக கறிக்கோழிகள் இறப்பை தடுக்க பண்ணை உரிமையாளர்கள் புதிய முயற்சி செய்து உள்ளார்கள்.
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை பகுதியில் கொளுத்தும் வெயில் காரணமாக கறிக்கோழிகள் இறப்பை தடுக்க பண்ணை உரிமையாளர்கள் புதிய முயற்சி செய்து உள்ளார்கள்.
கறிக்கோழி வளர்ப்பு
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் வதம்பச்சேரி, வாரப்பட்டி, செஞ்சேரி, செஞ்சேரிமலை, ஜல்லிபட்டி, அப்பநாயக்கன்பட்டி உள்பட பல இடங்களில் 500-க்கும் மேற்பட்ட கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில் வளர்க்க விடப்படும் ஒருநாள் குஞ்சு 42 நாள் முதல் 45 நாட்களில் தலா 2 கிலோ எடை கொண்ட கறிக்கோழியாக மாறுகிறது.
இந்த எடையில் பண்ணைகளில் பிடிக்கப்படும் கறிக்கோழிகள் பொள்ளாச்சி, தாராபுரம், ஒட்டன்சத்திரம், கேரளா உள்பட பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. வழக்கமாக கோழிப்பண்ணைகளில் வளர்க்கவிடப்படும் குஞ்சுகள் அல்லது வளர்ந்த கோழிகள் இடநெருக்கடி அல்லது நோய் தாக்குதல் காரணமாக 4 சதவீதம் இறப்பது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.
குளிர்ச்சியை ஏற்படுத்துவது
கடந்த ஒரு மாதமாக சுல்தான்பேட்டை பகுதியில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. கோடை வெயிலுக்கு தாக்குபிடிக்காமல் கோழி இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 4 சதவீதத்தில் இருந்து 12 சதவீதம் வரை உயர்ந்து உள்ளது. இதனால் பண்ணை உரிமையாளர்கள் நஷ்டத்தில் உள்ளதோடு பெரும் கலக்கத்தில் உள்ளார்கள். இந்தநிலையில் கறிக்கோழி இறப்பை தடுக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக புதுயுக்தியாக கோழிப்பண்ணை சுற்றிலும் ஈரச் சாக்குகளை தொங்கவிடுவது, தென்னை மட்டை ஓலைகளை வெட்டி தகர செட்டுகள் மீது போடுவது, பண்ணையை சுற்றி தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிர்ச்சியை ஏற்படுத்துவது, கோழிகளுக்கு குடிக்க அதிகம் தண்ணீர் கொடுப்பதுபோன்ற செயல்களில் பண்ணை உரிமையாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். இந்த நடவடிக்கைகள் மூலம் இறப்பு விகிதம் அதிகரிப்பை குறைக்க முடியும் என பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story