பாலியல் வழக்கில் கோர்ட்டில் சரணடைந்த கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் குண்டர் சட்டத்தில் கைது
பாலியல் வழக்கில் கோர்ட்டில் சரணடைந்த திண்டுக்கல் தனியார் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல்:

பாலியல் வழக்கு
திண்டுக்கல்லை அடுத்த முத்தனம்பட்டியில் தனியார் நர்சிங் கல்லூரி செயல்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த கல்லூரியில் படித்த மாணவிகளுக்கு, தாளாளர் ஜோதிமுருகன் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. மேலும் மாணவ-மாணவிகள் சார்பில் போராட்டமும் நடந்தது. இதையடுத்து 3 மாணவிகள் தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் தாளாளர், விடுதி வார்டன் ஆகியோர் மீது புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் ஜோதிமுருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த விடுதி வார்டன் அர்ச்சனாவையும் கைது செய்தனர். ஆனால் தாளாளரை கைது செய்வதற்குள் அவர் தலைமறைவானார். அவரை போலீசார் வலைவீசி தேடி வந்த நிலையில், ஜோதிமுருகன் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர் அவர் திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாமீன் ரத்து
இதற்கிடையே திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் ஜோதிமுருகன் நிபந்தனை ஜாமீன் பெற்றார். இதையறிந்த மகளிர் அமைப்புகள் ஜோதிமுருகனுக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தின. அதேநேரம் மதுரை ஐகோர்ட்டு கிளையில் போலீசார் மற்றும் அகில இந்திய பெண்கள் கூட்டமைப்பு சார்பில் ஜோதிமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த கோர்ட்டு, ஜோதிமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ததோடு, குறிப்பிட்ட நாட்களில் திண்டுக்கல் கோர்ட்டில் சரண் அடையவும் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ஜோதிமுருகன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் ஐகோர்ட்டு தீர்ப்பையே சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது.
குண்டர் சட்டத்தில் கைது
இதையடுத்து திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் நீதிபதி புருஷோத்தமன் முன்னிலையில் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் நேற்று முன்தினம் சரண் அடைந்தார். இந்த நிலையில் பாலியல் புகாரில் சிக்கிய ஜோதிமுருகனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அனுமதிக்கும்படி மாவட்ட கலெக்டர் விசாகனுக்கு போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பரிந்துரை செய்தார். அதன்படி ஜோதிமுருகனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து ஜோதிமுருகனை குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story