திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டுகளில் சமரச தின விழிப்புணர்வு ஊர்வலம்


திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டுகளில் சமரச தின விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 9 April 2022 9:16 PM IST (Updated: 9 April 2022 9:16 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் சமரச தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

பழனி:
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் சமரச தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
சமரச தினம்
பழனி கோர்ட்டில் உள்ள சமரச தீர்வு மையம் சார்பில் சமரச தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. இதற்கு கூடுதல் மாவட்ட நீதிபதி கருணாநிதி தலைமை தாங்கி, ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், மாஜிஸ்திரேட்டுகள் ஹரிகரன், ஜெயசுதாகர், ஞானசம்பந்தம், ரகுபதிராஜா, போலீஸ் துணை சூப்பிரண்டு சத்தியராஜ், இன்ஸ்பெக்டர் உதயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பழனி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கிய ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகள் வழியாக பழனி கோர்ட்டில் நிறைவு பெற்றது. இந்த ஊர்வலத்தில் கோர்ட்டு ஊழியர்கள், வக்கீல்கள், பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். ஊர்வலத்தின்போது சமரச விழிப்புணர்வு கருத்துகள் குறித்த துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
வேடசந்தூர்
இதேபோல் வேடசந்தூரில் நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை, கோர்ட்டு நீதிபதி ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாஜிஸ்திரேட்டுகள் முருகநந்தி, சதீஷ்குமார், வக்கீல் சங்க செயலாளர் தங்கவேல் முனியப்பன், முன்னாள் தலைவர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த ஊர்வலம் வேடசந்தூர் மார்க்கெட் சாலை வழியாக சென்று அம்பேத்கர் சிலை பகுதியில் நிறைவடைந்தது.
ஊர்வலத்தின்போது, வழக்கு சமரசம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இதில் தண்ணீர்பந்தம்பட்டியில் உள்ள மதுரை காமராஜர் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
நத்தத்தில் நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை, நத்தம் கோர்ட்டு நீதிபதி கலையரசி ரீனா தொடங்கி வைத்தார். கோர்ட்டு வளாகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம், ஒன்றிய அலுவலகம், பஸ் நிலையம், பெரிய கடைவீதி வழியாக சென்று மீண்டும் கோர்ட்டில் நிறைவடைந்தது. இதில், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், கோர்ட்டு ஊழியர்கள், வக்கீல்கள், சமரச தீர்வு மையத்தினர் கலந்துகொண்டனர்.
கொடைக்கானல்
கொடைக்கானலில் நடைபெற்ற ஊர்வலத்தை, கொடைக்கானல் கோர்ட்டு நீதிபதிகள் தினேஷ்குமார், கார்த்திக் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். கோர்ட்டில் இருந்து தொடங்கிய ஊர்வலம், அண்ணா சாலை, மூஞ்சிக்கல் வழியாக சென்று மீண்டும் கோர்ட்டில் முடிவடைந்தது. இதில், போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன் மற்றும் போலீசார், வக்கீல்கள், பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

Next Story