ஒரு நாடு, ஒரு குடும்ப அட்டை திட்டத்தின் கீழ் புலம் பெயர் தொழிலாளர்கள் பயன்பெற புதிய செயலி - கலெக்டர்
ஒரு நாடு, ஒரு குடும்ப அட்டை திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பயன் பெற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார்.
திருவாரூர்:-
ஒரு நாடு, ஒரு குடும்ப அட்டை திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பயன் பெற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
செயலி அறிமுகம்
பொது வினியோக திட்டத்தின் கீழ் கடந்த 1.10.2020 முதல் ஒரு நாடு ஒரு குடும்ப அட்டை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ‘மேரா ரேஷன் ஆப்’ என்ற செயலியில் பதிவு செய்வதன் மூலம் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பலன்களை பெறலாம். ஒரு நாடு, ஒரு குடும்ப அட்டை திட்டத்தை எளிதாக்கும் வகையில் அருகில் உள்ள ரேஷன் கடைகளை அடையாளம் காண்பதில் மக்கள் பயனடைவதற்காக மத்திய அரசு ‘மேரா ரேஷன் ஆப்’ என்ற செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த செயலியில் பதிவு செய்வதன் மூலம் அருகில் உள்ள ரேஷன் கடைகளை அடையாளம் காண முடியும். மேலும் உணவு தானிய ஒதுக்கீடு, சமீபத்திய பரிவர்த்தனைகள் மற்றும் ஆதார் நிலை பற்றிய விவரங்களை எளிதாக சரி பார்க்க முடியும்.
பயன் பெறலாம்
மேற்கண்ட ‘மேரா ரேஷன் ஆப்’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்து ஒரு நாடு, ஒரு குடும்ப அட்டை திட்டம் மூலம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story