ஸ்கூட்டரில் சென்றபோது லாரி மோதி இளம்பெண் பலி


ஸ்கூட்டரில் சென்றபோது லாரி மோதி இளம்பெண் பலி
x
தினத்தந்தி 9 April 2022 9:33 PM IST (Updated: 9 April 2022 9:33 PM IST)
t-max-icont-min-icon

ஸ்கூட்டரில் சென்ற போது லாரி மோதி இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

மண்டியா:

  மண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகா கரபு கிராமத்தைச் சேர்ந்தவர் சுமதி (வயது 28). இவர் இன்று காலை தனது ஸ்கூட்டரில் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கே.ஆர்.எஸ். பஸ் நிறுத்தம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த லாரி, அவரது ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட அவர், லாரியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து தொடர்பாக கே.ஆர்.எஸ். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story