கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சமரச தின விழா
கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சமரச தின விழா மாவட்ட நீதிபதி கீதாராணி தலைமையில் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தில் சமரச தீர்வு மையத்தின் சார்பில் சமரச தின விழா நடைபெற்றது. இதற்கு 3-வது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி கீதாராணி தலைமை தாங்கினார். வக்கீல் சங்க தலைவர் ராமசாமி, செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதன்மை சார்பு நீதிபதி சுரேஷ் வரவேற்றார். விழாவில் நீதிபதி கீதாராணி பேசுகையில், பொதுமக்கள் சமரச தீர்வு மையத்தை அணுகி தங்கள் பிரச்சினைகள் மற்றும் வழக்குகளுக்கு சுலபமாக தீர்வு காணலாம். மேலும் இலவச சட்ட உதவி முகாம் மற்றும் லோக் அதாலத் மூலம் தங்கள் வழக்குகளுக்கும் தீர்வு பெறலாம் என்றார்.
இதில் கூடுதல் சார்பு நீதிபதி கவிதா, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பத்மபிரியா, குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் அருண்பாண்டியன், கண்ணன், சமரச தீர்வு மைய மத்தியஸ்தர் வக்கீல்கள் செந்தில்குமார், சிவலோகநாதன், ராஜ, சங்கர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story