பா.ஜ.க. கொடியேற்று விழா


பா.ஜ.க. கொடியேற்று விழா
x
தினத்தந்தி 9 April 2022 9:45 PM IST (Updated: 9 April 2022 9:45 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூரில் பா.ஜ.க. கொடியேற்று விழா நடைபெற்றது.

திருக்கோவிலூர், 

பாரதிய ஜனதா கட்சியின் 42-வது நிறுவன தினத்தை முன்னிட்டு திருக்கோவிலூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக கொடி ஏற்றும் நிகழ்ச்சி மற்றும் தாமரை நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி திருக்கோவிலூர் ஐந்துமுனை சந்திப்பில் நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜ.க. ஊடகப்பிரிவு தலைவர் தொழிலதிபர் ஆர்.கார்த்திகேயன்  தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் முன்னாள் எம்.எல்.ஏ. வி.ஏ.டி.கலிவரதன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் வசந்தன், ஒன்றிய பொதுச்செயலாளர்கள் எஸ்.பத்ரிநாராயணன், ராஜாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய தலைவர் ராமன் கட்சி கொடியை ஏற்றி வைத்து, நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. 

இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட துணைத்தலைவர் அலமேலு, தொழில் பிரிவு மாவட்ட துணைத்தலைவர் சுனில் ஜெயின்,  முகையூர் ஒன்றிய தலைவர் எஸ்.தங்கராஜ், ஒன்றிய செயலாளர் நளினி, தில்லை, ஒன்றிய நிர்வாகிகள் எஸ்.முருகன், திருமுருகன், சண்முகவடிவேல், ஓ.ரவிலால், இளைஞரணி ராஜ்குமார், ஒன்றிய செயலாளர் தங்கத்தமிழ் வாசுதேவன் உள்பட பலா் கலந்து கொண்டனர். முடிவில் திருக்கோவிலூர் ஒன்றிய மகளிரணி தலைவி புவனேஸ்வரி நன்றி கூறினார்.

Next Story