பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவதற்கு எதிரான விழிப்புணர்வு இயக்கம்


பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவதற்கு எதிரான விழிப்புணர்வு இயக்கம்
x
தினத்தந்தி 9 April 2022 9:46 PM IST (Updated: 9 April 2022 9:46 PM IST)
t-max-icont-min-icon

போடியில், பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவதற்கு எதிரான விழிப்புணர்வு இயக்கம் நடந்தது.

போடி:
போடி நகராட்சி 27-வது வார்டில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்புறம் பொதுமக்களால் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. இதை தடுக்க பேனர்கள் வைப்பது, அரளிச்செடிகள் நடுவது மற்றும் வண்ண கோலங்கள் வரைவது போன்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் அந்த இடத்தில் பொதுமக்களால் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது.
இதையடுத்து போடி நகராட்சி சார்பில் பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவதற்கு எதிரான விழிப்புணர்வு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், தர்மராஜ், ஜெயசீலன் ஆகியோர் முன்னிலையில் நகராட்சி பணியாளர்கள் மூலம் பதாகைகளுடன் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நகராட்சி கவுன்சிலர்கள் லதா, கஸ்தூரி, தி.மு.க. பிரமுகர் நம்பிக்கை நாகராஜன் மற்றும் தூய்மை இந்தியா திட்டப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதுபோல 28, 29-வது வார்டு தெருக்களில் ஒலி பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 


Next Story