வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது


வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது
x
தினத்தந்தி 10 April 2022 12:30 AM IST (Updated: 9 April 2022 10:04 PM IST)
t-max-icont-min-icon

முத்துப்பேட்டை அருகே வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது.

முத்துப்பேட்டை:-

முத்துப்பேட்டை அருகே பேட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். இவருடைய வீட்டுக்குள் நேற்று 5 அடி நீள நல்லப்பாம்பு ஒன்று புகுந்தது. இதனால் அதர்ச்சி அடைந்த பாஸ்கர் முத்துப்பேட்டை வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து வனச்சரக அலுவலர் தாஹிர் அலி, வனவர் பெரியசாமி ஆகியோர் உத்தரவின் பேரில் வனக்காப்பாளர் சிவநேசன் மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர். 

Next Story