சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து மயிலாடுதுறையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை:
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து மயிலாடுதுறையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் மனோகரன் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் அகோரம் வரவேற்றார்.
இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மணிசங்கர், நற்பணி மன்ற மாவட்ட செயலாளர் மணிபாரதி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் உமாசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் சீர்காழி நகர செயலாளர் சந்துரு நன்றி கூறினார்.
கோஷங்கள்
பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்திற்கு காரணமான பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை உடனே குறைக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
--
Related Tags :
Next Story