பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த கோடைமழை
திண்டுக்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கோடைமழை கொட்டி தீர்த்தது. மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
திண்டுக்கல்:

கோடைவெயில்
தமிழகத்தில் கோடைவெயிலின் தாக்கம் அதிகமுள்ள மாவட்டங்களில் திண்டுக்கல்லும் ஒன்றாகும். அந்த வகையில் திண்டுக்கல்லில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. காலை 10 மணிக்கே மதியவேளை போன்று வெயில் கொளுத்துகிறது. பகலில் மக்கள் வியர்வை குளியலில் நனைவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.
இந்த வெப்பத்தில் இருந்து தப்பிக்க இளநீர், கூழ் உள்ளிட்டவற்றை மக்கள் குடிக்கின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஒருசில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. எனவே கொதிக்கும் கோடை வெப்பத்தை தணிக்க மழை பெய்யுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் மாவட்டம் முழுவதும் வழக்கம் போல் வெயில் கொளுத்தி வந்தது.
கொட்டி தீர்த்த கோடைமழை
இதற்கிடையே நேற்றும் காலையில் சூரியன் தனது வெப்ப கதிர்களை வீசியது. ஒருபுறம் வெயில் வாட்டி வதைத்தாலும், அவ்வப்போது வானில் மேகக்கூட்டங்கள் திரண்டதால் வெப்பம் சற்று குறைந்தது. மேலும் மாலையில் வானை கருமேகக் கூட்டங்கள் சூழ்ந்தன. பின்னர் மாலை 4 மணிக்கு ஒன்றிரண்டாக மழைத்துளிகள் பூமியில் விழத்தொடங்கின.
சிறிது நேரத்தில் அது பலத்த மழையாக மாறியது. வெப்பத்தை தணிக்கும் வகையில் கோடைமழை பெய்ததால், பலரும் ஆர்வமுடன் மழையில் நனைந்தபடி சென்றனர். ஆனால் திடீரென பலத்த இரைச்சலுடன் காற்று வீசியது. மழையுடன் காற்றும் சேர்ந்து கொண்டதால், எதிரே வருபவர்கள் கூட தெரியாத அளவுக்கு சூழல் மாறியது. சுமார் 30 நிமிடங்கள் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
இதனால் திண்டுக்கல் ஆர்.எஸ்.சாலை, பழைய ஆர்.எம்.எஸ்.சாலை, ஏ.எம்.சி. சாலை, நேருஜிநகர், சிலுவத்தூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைவெள்ளம் ஆறாக ஓடியது. இதில் நாகல்நகர் ஆர்.எஸ்.சாலையில் முழங்கால் அளவுக்கு மழைவெள்ளம் ஓடியதால் இருசக்கர வாகனங்கள், கார்கள் மெதுவாக சென்றன. இதனால் நாகல்நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பள்ளிகள் விடப்பட்டதால் மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடி வீடுகளுக்கு ெசன்றனர்.
மின்சாரம் துண்டிப்பு
மேலும் இருசக்கர வாகனங்களில் சென்றவர்களை பலத்த காற்று கீழே தள்ளியது. திண்டுக்கல்லில் பல இடங்களில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த சைக்கிள்கள், இருசக்கர வாகனங்கள் காற்றில் சாய்ந்து விழுந்தன. மேலும் வீடுகள், மொட்டை மாடிகளில் அமைக்கப்பட்டு இருந்த ஆஸ்பெஸ்டாஸ் கூரைகளை காற்று பிய்த்து எறிந்தது. சாலையோர கடைகளின் தார்ப்பாய் கூரைகள் காற்றில் பறந்தன.
அதோடு பல இடங்களில் மரங்கள், மரக்கிளைகள் முறிந்து சாலையில் விழுந்தன. மேலும் சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து மின்கம்பிகளில் விழுந்தன. இதனால் திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. திண்டுக்கல் நகரின் சில பகுதிகள், புறநகர் பகுதிகளில் மாலை 6.30 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
பழனி, நிலக்கோட்டை
இதேபோல் நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் 30 நிமிடமும், பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு, மருதாநதி ஆகிய பகுதிகளில் ஒரு மணி நேரமும் பலத்த காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது. மேலும் கோபால்பட்டி, சின்னாளப்பட்டி, கொடைரோடு, பழனி, செம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதன்மூலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று கோடைமழை பெய்து இருக்கிறது.
சுட்டெரித்த கோடை வெயிலின் உக்கிரத்தை கோடைமழை தணித்தது. இரவில் வெப்பம் மாறி இதமான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதேநேரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் பெய்த மழை விவசாயிகளுக்கும் மகிழ்ச்சியை அளித்து இருக்கிறது.
கொடைக்கானல்
கொடைக்கானல் மலைப்பகுதியில் நேற்று முன்தினம் கனமழை கொட்டித்தீர்த்தது. இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக கொடைக்கானலில் மழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் பெய்த மழையால் கொடைக்கானல் நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் நீர்வீழ்ச்சி, பியர்சோலா அருவி, தேவதை அருவி உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த மழையால் கொடைக்கானலுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர். மேலும் இரவில் இடி-மின்னலுடன் பலத்த காற்று வீசியதால் பல்வேறு இடங்களில் மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன. இதனால் கொடைக்கானலில் இரவு 7 மணி முதல் 9 மணி வரை மின்தடை ஏற்பட்டது. இதேபோல் கொடைக்கானலை ஒட்டியுள்ள செண்பகனூர், வில்பட்டி உள்ளிட்ட மலைக்கிராமங்களிலும் பலத்த மழை பெய்தது.

Related Tags :
Next Story