சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அகற்றப்படுமா?


சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அகற்றப்படுமா?
x
தினத்தந்தி 9 April 2022 10:14 PM IST (Updated: 9 April 2022 10:14 PM IST)
t-max-icont-min-icon

குத்தாலம் அருகே சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

குத்தாலம்:
குத்தாலம் அருகே சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
 மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி
 குத்தாலத்தை அடுத்த கோமல் ஊராட்சி எல்லையம்மன் கோவில் அருகில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. 
இந்த தொட்டி மூலம் அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் தொட்டி பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. 
இந்த நிலையில்  தற்போது அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து காணப்படுகிறது.
ஆபத்தான நிலையில் உள்ளது
 மேலும் குடிநீர் தொட்டியின் தூணில் சிமெண்டு கான்கிரீட் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இந்த தொட்டி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. 
இந்த குடிநீர் தொட்டியின் அருகே எல்லையம்மன் மற்றும் மன்மதீஸ்வரர் கோவில்கள், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம், ரேஷன் கடை உள்ளிட்டவை உள்ளன. இதனால் இந்த பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிக அளவில் இருக்கும். 
அகற்ற வேண்டும்
குடிநீர் தொட்டி இடிந்து விழுந்து விடுமோ? என்ற அச்சத்துடன் அந்த வழியாக பொதுமக்கள் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயிர் பலி ஏற்படுவதற்கு முன்பு  சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை  நீர்த்தேக்க தொட்டியை அகற்றி விட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என  அந்த பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Next Story