தர்மபுரியில் தூய்மை பணியாளர் விஷம் குடித்து தற்கொலை


தர்மபுரியில் தூய்மை பணியாளர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 9 April 2022 10:21 PM IST (Updated: 9 April 2022 10:21 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் தூய்மை பணியாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தர்மபுரி, :
தர்மபுரியை அடுத்த பழைய தர்மபுரி பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 35). தூய்மை பணியாளரான இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆயுதப்படை மைதானம் அருகே விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி முனியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story