மூதாட்டியிடம் 3 பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு


மூதாட்டியிடம் 3 பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 9 April 2022 10:23 PM IST (Updated: 9 April 2022 10:23 PM IST)
t-max-icont-min-icon

மூதாட்டியிடம் 3 பவுன் தங்கச்சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியை சேர்ந்த பெரியகருப்பனின் மனைவி முத்தம்மாள் (வயது 65). இவர் சம்பவத்தன்று அரிமளத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு அரசு பஸ்சில் பயணம் செய்து வந்தார். இந்த நிலையில் ராம் தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்றனர். இது தொடர்பாக புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் முத்தம்மாள் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story