பெண்ணிடம் மாமூல் கேட்டு மிரட்டல் - அ.தி.மு.க. பெண் நிர்வாகி கைது


பெண்ணிடம் மாமூல் கேட்டு மிரட்டல் - அ.தி.மு.க. பெண் நிர்வாகி கைது
x
தினத்தந்தி 9 April 2022 10:26 PM IST (Updated: 9 April 2022 10:26 PM IST)
t-max-icont-min-icon

தள்ளுவண்டி கடை வைத்திருந்த பெண்ணிடம் மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்த அ.தி.மு.க. பெண் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவில் அருகே தள்ளுவண்டி கடையில் வளையல் கடை நடத்துபவர் சித்ரா . பல ஆண்டுகளாக கடை நடத்தி வரும் சித்ராவிடம் காஞ்சீபுரம் வளத்தீஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த அ.தி.மு.க. மகளிரணி நிர்வாகி திலகா (வயது 43), ரூ.50 ஆயிரம் மாமூல் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. சித்ரா பணம் கொடுக்க மறுத்துள்ளார்.

இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில், அ.தி.மு.க. நிர்வாகி திலகா, சித்ராவை தாக்கியதில் அவர் காயம் அடைந்து காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இது குறித்து காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்தில் சித்ரா புகார் அளித்தார். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து திலகாவை கைது செய்து, காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். கோர்ட்டு அவரை 15 நாட்கள் சிறையில் வைக்க உத்தரவிட்டது. அதையொட்டி திலகா, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story