சிதம்பரம் அருகே ரெயிலில் அடிப்பட்டு கவரிங்நகை கடை உரிமையாளர் சாவு கடன் நெருக்கடியில் தற்கொலை செய்துகொண்டரா? போலீஸ் விசாரணை
சிதம்பரம் அருகே ரெயிலில் அடிப்பட்டு கவரிங்க நகைக்கடை உரிமையாளர் உயிரிழந்தார். கடன் நெருக்கடியால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிதம்பரம்,
சிதம்பரம் அடுத்த கிள்ளை ரெயில் நிலையம் அருகே, தண்டவாளத்தில் ஒருவர் அடிப்பட்டு இறந்து கிடந்தார். இதுபற்றி அறிந்த சிதம்பரம் இருப்புபாதை போலீசார், இன்ஸ்பெக்டர் அருண் குமார் தலைமையில் விரைந்து சென்று, இறந்தவரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கவரிங் நகை கடை உரிமையாளர்
மேலும், அவர் யார் என்பது குறித்து விசாரித்த போது, சிதம்பரம் அனந்தீஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்த ராமன் மகன் சரவணன் (வயது 45) என்பது தெரியவந்தது.
இவர் சிதம்பரம் காசுக்கடை தெருவில் கவரிங் நகைகடை வைத்துள்ளார். இவர் தனியார் நிதிநிறுவனம் மற்றும் சில தனிநபர்களிடமும் பல லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார்.
மேலும் கடையிலும் போதிய வருவாய் இல்லாமல் இருந்தது. இதனால் கடனை திரும்பி செலுத்த முடியாத நிலைக்கு சரவணன் தள்ளப்பட்டார். இதனால் அவர் மனவேதனையில் இருந்தது தெரியவந்தது.
போலீஸ் விசாரணை
இந்த நிலையில் நேற்று காலை விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற பயணிகள் ரெயிலில் அடிப்பட்டு சரவணன் இறந்து இருப்பது தெரியவந்தது.
இதன் மூலம் கடன் சுமை காரணமாக சரவணன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா ? என்று இருப்பு பாதை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story