வீராமுத்தூர் கிராமத்தில் பகுதிநேர ரேஷன் கடை. அமைச்சர் காந்தி திறந்துவைத்தார்
வீராமுத்தூர் கிராமத்தில் பகுதிநேர ரேஷன் கடையை அமைச்சர் காந்தி திறந்துவைத்தார்.
சோளிங்கர்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த வீராமுத்தூர் கிராமத்தில் பகுதிநேர ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு பகுதிநேர ரேஷன் கடையை ரிப்பன் வெட்டி திறந்துவைத்து, குடும்ப அட்டை தாரர்களுக்கு அரிசி, பருப்பு, சக்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கினார்.
தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் அசோகன், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத்தலைவர் நாகராஜ், சோளிங்கர் நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி அசோகன், ஒன்றியக் குழு தலைவர் கலைக்குமார், நகராட்சி துணைத் தலைவர் பழனி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராமன், சாவித்திரி பெருமாள், நதியா மதன்குமார், கரிக்கல் காந்திஜி பள்ளி நிர்வாகி கருணாகரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story