தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 9 April 2022 11:00 PM IST (Updated: 9 April 2022 11:00 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டியில் வெளிவந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான செய்திகள் வருமாறு:-

அடிப்படை வசதிகள் வேண்டும்

நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் தகட்டூர் சுப்பிரமணியங்காடு சமத்துவபுரம் முதல் பன்டாரத்தான்காடு முள்ளியாற்றின் கிழக்கு கரை பகுதி வரை சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக பள்ளிக்கூடம் செல்லும் மாணவ -மாணவிகள், பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

                                                                                                                             -கிராம பொதுமக்கள், தகட்டூர்.

குப்பைகள் அகற்றப்படுமா?

மயிலாடுதுறை ரெயில்வே பாலத்திற்கு கீழ் பகுதியில் ஏராளமான குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. ரெயில் நிலையத்திற்கு ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் குப்பைகள் தேங்கி மலை போல் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை குப்பைகளை அகற்ற வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

                                                                                                                              -பொதுமக்கள் மயிலாடுதுறை.

Next Story