குப்பைகளை உடனே அகற்ற வேண்டும்


குப்பைகளை உடனே அகற்ற வேண்டும்
x
தினத்தந்தி 9 April 2022 11:49 PM IST (Updated: 9 April 2022 11:49 PM IST)
t-max-icont-min-icon

குப்பைகளை உடனே அகற்ற வேண்டும்

 அனுப்பர்பாளையத்தில் உள்ள 1-வது மண்டல அலுவலகத்தில் மேயர் தினேஷ்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது 1வது மண்டலத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களின் எண்ணிக்கை மற்றும் வருகை நேரம், குப்பை வாகனங்கள் பராமரிப்பு, சரியான நேரத்திற்கு பணிகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பது போன்ற விவரங்களை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் மேயர் கேட்டறிந்தார். பின்னர் குமார்நகர் பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து வினியோகம் செய்யப்படும் குடிநீர் தொடர்பாகவும் மேயர் ஆய்வு செய்தார். அப்போது மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் சீராக வினியோகம் செய்ய வேண்டும் என்றும், குடியிருப்பு பகுதிகளில் குப்பைகள் தேங்காத வகையில் உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், பொதுமக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேயர் ந.தினேஷ்குமார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

Next Story