திம்பம் மலைப்பாதையில் லாரிகளை இயக்க அனுமதிகோரி வேலைநிறுத்தம்: ஈரோடு வழியாக நாளை லாரிகளை இயக்க வேண்டாம்-மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு

திம்பம் மலைப்பாதையில் லாரிகளை இயக்க அனுமதிகோரி வேலைநிறுத்தம்: ஈரோடு வழியாக நாளை லாரிகளை  இயக்க வேண்டாம்-மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு
x
தினத்தந்தி 10 April 2022 12:08 AM IST (Updated: 10 April 2022 12:08 AM IST)
t-max-icont-min-icon

திம்பம் மலைப்பாதையில் லாரிகளை இயக்க அனுமதி கோரி நாளை (திங்கட்கிழமை) வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. எனவே நாளை ஒருநாள் மட்டும் ஈரோடு வழியாக லாரிகளை இயக்க வேண்டாம் என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்து உள்ளது.

நாமக்கல்:

திம்பம் மலைப்பாதை
தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி, செயலாளர் வாங்கிலி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் 16,200 கிலோவுக்கு மேல் எடை கொண்ட கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக லோடு ஏற்றி செல்லும் லாரிகள் சுமார் 300 கிலோ மீட்டர் சுற்றி செல்வதால் கூடுதலாக டீசலுக்கு ரூ.7 ஆயிரம் வரை செலவாகிறது.
மேலும் லோடுகளை கொண்டு செல்ல கால விரயமும் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் லாரி உரிமையாளர்கள் வெகுவாக பாதிக்கப்படுகிறார்கள்.
லோடு ஏற்றி செல்ல வேண்டாம்
எனவே பண்ணாரி திம்பம் மலைச்சாலையில் வாகனங்கள் செல்ல விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி நாளை (திங்கட்கிழமை) ஈரோடு மாவட்டம் முழுவதும் லாரிகளை இயக்காமல் நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் சத்தியமங்கலம் முழுவதும் ஒருநாள் கடையடைப்பு நடத்தவும் வியாபாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
இந்த முடிவிற்கு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முழு ஆதரவு அளிக்கிறது. எனவே அனைத்து தரப்பட்ட சங்கங்களும், இதற்கு முழு ஒத்துழைப்பு அளித்து இந்த போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும். தமிழகத்தை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் நாளை ஒரு நாள் மட்டும் ஈரோடு வழியாக லோடுகளை ஏற்றி செல்ல வேண்டாம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

Next Story