நாமக்கல் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கோடை மழை
நாமக்கல் மாவட்டத்தில் கோடை மழை கொட்டி தீர்த்தது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் கோடை மழை கொட்டி தீர்த்தது.
கோடை மழை
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக வெயில் வாட்டி வதைத்தது. குறிப்பாக பொதுமக்கள் மதிய நேரங்களில் வெயிலின் தாக்கத்தால் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் எருமப்பட்டி, பொட்டிரெட்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியில் இருந்து 10 மணி வரை கனமழை பெய்தது. இதனால் வயல்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இந்த கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வெண்ணந்தூர்
இதேபோல் வெண்ணந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் நேற்று வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் மாலை 3 மணி முதல் 3.30 மணி வரை கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
வயல்வெளிகளில் ஆங்காங்கே குளம் குட்டைகள்போன்று தண்ணீர் தேங்கி நின்றதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதில் நடுப்பட்டி, அலவாய்ப்பட்டி, அத்தனூர், வெண்ணந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது.
மோகனூரில் ஐஸ் கட்டி மழை
மோகனூர் பகுதியில் நேற்று மாலை திடீரென கருமேகம் திரண்டு ஐஸ்கட்டி மழைபெய்தது. இந்த திடீர் மழையால் மகிழ்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கையில் ஐஸ்கட்டியை எடுத்து விளையாடி மகிழ்ந்தனர். இந்த திடீர் மழையால் இதனால் மோகனூர் பேரூராட்சி பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதேபோல் சேந்தமங்கலம் அருகே உள்ள பழையபாளையம் மற்றும் அலங்காநத்தம் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள ஒரு விவசாய நிலங்களில் கோடை மழையால் குட்டை போல் தண்ணீர் தேங்கி நின்றதை காண முடிந்தது.
Related Tags :
Next Story