மாரநாடு கருப்பணசுவாமி கோவிலில் மாசி களரி திருவிழா
மாரநாடு கருப்பணசுவாமி கோவிலில் மாசி களரி திருவிழா நடைபெற்றது
திருப்புவனம்,
திருப்பாச்சேத்தி அருகே உள்ளது மாரநாடு கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற கருப்பணசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசிக் களரி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் காலை கோவில் முன்பு ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்தும் கருப்பணசுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு படையல் வைத்து வழிபாடுகள் செய்தனர். வேண்டுதல் வைத்திருந்த பக்தர்கள் சிறியது முதல் பெரிய மாலைகள் என வாங்கி வந்து கருப்பணசுவாமி கோவிலின் முன்பு இருக்கும் கல்தூணில் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். களரி பொட்டலில் உள்ள சுமார் 25 அடி உயர கல்தூணில் பக்தர்கள் வேண்டுதலுக்காக காணிக்கையாக செலுத்தப்பட்ட மாலைகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டன. விடிய விடிய சாமியாட்டம் நடைபெற்றது. சாமியாட்டம் முடிந்த பின்னர் கல்தூணில் அணிவிக்கப்பட்ட மாலைகளை எடுத்து வீடுகளில் வைத்து வழிபாடு செய்தால் நல்லது நடக்கும் என்ற ஐதீக முறைப்படி அவற்றை பக்தர்கள் போட்டி போட்டுக ்கொண்டு வீட்டிற்கு எடுத்து சென்றனர். திருவிழாவையொட்டி விடிய, விடிய வாணவேடிக்கை நடைபெற்றது. விழாவில் மதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்பட பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடு களை மாரநாடு சீமை கிராமத்தினர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையினர் செய்திருந்தனர். பக்தர்களின் வசதிக்காக மதுரை, சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் இருந்து சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப் பாளர் செந்தில்குமார் உத்தரவின்பேரில் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமாணிக்கம் மேற்பார்வையில 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story