மத்திய, மாநில அரசின் போட்டி தேர்வுகளுக்கு தினசரி பயிற்சி வகுப்பு


மத்திய, மாநில அரசின் போட்டி தேர்வுகளுக்கு தினசரி பயிற்சி வகுப்பு
x
தினத்தந்தி 10 April 2022 12:39 AM IST (Updated: 10 April 2022 12:39 AM IST)
t-max-icont-min-icon

மத்திய, மாநில அரசு அறிவிக்கும் போட்டி தேர்வுகளுக்காக சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தினசரி பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.

சிவகங்கை, 
மத்திய, மாநில அரசு அறிவிக்கும் போட்டி தேர்வுகளுக்காக சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தினசரி பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.
பயிற்சி வகுப்பு
சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தின் தேசிய ரூர்பன் இயக்கம் சார்பில் அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2, குரூப்-2ஏ, மற்றும் குரூப்-4, போட்டி தேர்வுகளுக்கு விண்ணப்பித்து உள்ளவர்களுக்கு பயிற்சி வகுப்பு தொடங்கப் பட்டு உள்ளது. 
இதன் தொடக்கவிழா சிவகங்கையில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவல கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. மகளிர் திட்ட இணை இயக்குனர் வானதி வரவேற்று பேசினார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன் திட்ட விளக்கவுரையாற்றினார்.
கட்டணம்
தொடர்ந்து பயிற்சியில் கலந்துகொண்டவர்களிடம் கலெக்டர் கருத்துக்களை கேட்டார். அப்போது அவர்கள் கூறியதாவது:-
டி.என்.பி.எஸ்.சி. போட்டி தேர்விற்கு விண்ணப்பித்து உள்ள நாங்கள் தற்போது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பூங்கா வில் சென்று படிக்கிறோம். அங்கு நுழைவு கட்டணமாக ரூ. 5 வசூலிக்கின்றனர். அதை ரத்து செய்ய வேண்டும். மேலும் தற்போது பயிற்சி அளிப்பதுடன் நிறுத்தி விடாமல் தொடர்ந்து மத்திய அரசு தேர்வுகளுக்கும் பயன்படும் வகையில் பயிற்சி தர வேண்டும். 
அத்துடன் போட்டி தேர்வுக்கு தேவையான பாட திட்டங் களை ஆன்லைனில் இருந்து பதிவிறக்கம் செய்து படிக்க சிரமமாக உள்ளது. எனவே அவற்றை பதிவிறக்கம் செய்து தர வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது:- ஏற்கனவே மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் தொகுதி - 2 மற்றும் தொகுதி-4 பணியிடங்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடை பெற்று வருகின்றன. தற்போது கூடுதலாக ரூர்பன் இயக் கத்தின் சார்பில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளன. சிவகங்கையில் உள்ள பூங்காவில் இனி கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. 
முக்கிய குறிப்பு
மேலும் போட்டி தேர்விற்கு தேவையான பாடங்களை பிரிண்டு செய்து இலவசமாக வழங்கப்படும். பூங்காவில் அதிக நேரம் அமர்ந்து படிக்கும் வகையில் இருக்கை வசதி ஏற்படுத்தி தரப்படும். போட்டி தேர்விற்கு படிப்பவர்கள் படிக்கும் போது முக்கிய மான பகுதிகளை குறிப்பு எடுத்து வைத்து படிக்க வேண்டும். இதன்மூலம் முக்கியமான பகுதிகளை எளிதில் படிப்பதற்கு வசதியாக இருக்கும். தினசரி நாளிதழ்கள் மற்றும் முக்கியமான பருவ இதழ்களை படிப்பதன் மூலம் நடப்பு நிகழ்வுகளை எளிதில் தெரிந்து கொள்ளலாம். 
பயிற்சி வகுப்பு
மேலும் தேர்விற்கு 41 நாட்களே உள்ளதால் கவனத்தினை சிதறவிடாமல், தேர்வை மட்டும் கருத்தில் கொண்டு படிக்க வேண்டும்.. தேர்வு காலங்கள் மட்டுமன்றி தொடர்ந்து மத்திய, மாநில அரசு அறிவிக்கும்போட்டி தேர்வுகளுக்காக தினசரி பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். இதற்காக கலெக்டர் அலுவலகம் அருகில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இது விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். 
மேலும் தினந்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. படிக்கும் நேரத்தினை படிப்பதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த பயிற்சி வகுப்பில் வருபவர்களுக்கு கூடுதல் இடவசதி தேவைப்படும் பட்சத்தில் அதற்கும் வழி வகுக்கப்படும். சிவகங்கை மாவட்டத்தில் பயிற்சிக்கு தயாராகும் தேர்வாளர் ்களின் நலன் கருதி சிவகங்கை மற்றும் காரைக்குடி ஆகிய இடங்களில் படிப்பதற்கான பயிற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
பணியிடங்கள்
 தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள 5,300 பணியிடங்களில் 300 பணியிடங்களையாவது இந்த மாவட்டத்தினர் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் முத்துக் கழுவன், உதவி திட்ட அலுவலர் செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி திட்ட அலுவலர் விஜயசங்கரி நன்றி கூறினார்.

Next Story