மக்கள் நீதி மய்யத்தினர் ஆர்ப்பாட்டம்
மக்கள் நீதி மய்யத்தினர் ஆர்ப்பாட்டம்
திருப்பூர் மாவட்ட மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்றுகாலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு விவசாய அணி மாநில செயலாளர் மயில்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கமல் ஜீவா முன்னிலை வகித்தார்.
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், சொத்து வரி உயர்வால் ஏழை எளிய மக்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இதனால் சொத்துவரி உயர்வை வாபஸ் பெறக்கோரியும், நூல் விலை உயர்வால் பனியன் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் நூல் விலையை கட்டுப்படுத்தக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர் மேல் விறகு வைத்து காய்கறிகளை சமைப்பது போல் செய்திருந்தனர். கியாஸ் விலையேற்றத்தால் இனி விறகு அடுப்பில் தான் சமையல் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக இவ்வாறு செய்திருந்தனர். கியாஸ் சிலிண்டர் மற்றும் இருசக்கர வாகனத்துக்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி பலகையும் வைத்திருந்தனர்.
Related Tags :
Next Story