பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கிய அமைச்சர்


பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கிய அமைச்சர்
x
தினத்தந்தி 10 April 2022 12:57 AM IST (Updated: 10 April 2022 12:57 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கிய அமைச்சர்

வெள்ளகோவில் பகுதியில் பொதுமக்களிடம் குறைகளைகேட்டு அவர்களிடம் இருந்து மனுக்களை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பெற்றுக்கொண்டார். 
மனுக்கள் 
வெள்ளகோவில் ஒன்றியம் இலக்கமநாயக்கன்பட்டி ஊராட்சி  சாலைப்புதூர், ஊஞ்சவலசு, கம்பளியம்பட்டி, இலக்கமநாயக்கன்பட்டி உள்பட 23 இடங்களில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பொதுமக்களிடம் குறைகள் கேட்டு மனுக்களை பெற்றார். அப்போது அமைச்சர் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-
நகர பஸ்களில் இலவச பயணம்
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களின் வளர்ச்சிக்கென பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். ஊராட்சி பகுதிகளில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கண்டறிந்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளை விரைந்து முடிக்க வேண்டி அறிவுறுத்தியும் வருகிறார்கள். பதவியேற்று 10மாத காலங்களில் பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். தேர்தல் அறிக்கையில் அளித்திருக்கும் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மக்களின் நலன் கருதி, ஆவின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ 3 வீதம் குறைத்து விற்பனை செய்ய உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்து கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பஸ்களில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர் கல்வி படிக்கும் மாணவிகள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லாமலும், பஸ் பயண அட்டை இல்லாமலும் பயணம் செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மக்களை தேடி மருத்துவம்
மேலும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் இல்லத்திற்கே சென்று மருத்துவர் மற்றும் செவிலியர்கள் ஆகியோர் சிகிச்சை அளிக்கின்றனர். மேலும் படுத்த படுக்கையில் உள்ள நோயாளிகளுக்கு மற்றும் இயன்முறை மருத்துவ நோய் தடுப்பு பராமரிப்பு செவிலியர் மற்றும் இயன்முறை மருத்துவ சிகிச்சையாளர் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இத்திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது,
 கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் மருத்துவ முகாம்கள் வட்டார அளவில் நடைபெறும், ஒவ்வொரு முகாமிலும் மருத்துவர், மகப்பேறு மருத்துவர், குழந்தை நல மருத்துவர் உள்ளிட்ட 15 பேர் கொண்ட மருத்துவக் குழுக்கள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.  இன்னுயிர் காப்போம் திட்டம், விபத்து நடந்த உடனேயே தாமதமில்லாமல் விபத்தில் சிக்கியவரை சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதும் அவர்களுக்கு உடனடி சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதும் இத்திட்டத்தின் முக்கிய அம்சமாகும். 

Next Story