மாமனாரை தாக்கிய மருமகன் மீது வழக்கு
மாமனாரை தாக்கிய மருமகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நொய்யல்,
புகழூர் அருகே நடுநாணப்பரப்பு எழில் நகரை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 37). இவரது மனைவி சசிகலா (27). கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக சசிகலா ஹைஸ்கூல் மேடு பகுதியில் உள்ள தந்தை சண்முகம் வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில், ஜெகதீசன் தனது மகனை மனைவிடம் விட்டு செல்வதற்காக வந்துள்ளார். அப்போது சண்முகத்திற்கும், ஜெகதீசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜெகதீசன் மாமனார் சண்முகத்தை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெகதீசனின் மனைவி சசிகலா வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். இதேபோல் ஜெகதீசன் தனது மாமனார் சண்முகம், மாமியார் பூங்கொடி, மனைவி சசிகலா ஆகியோர் சேர்ந்து தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக புகார் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story