வரத்து குறைவால் காய்கறிகளின் விலை சற்று உயர்ந்தது


வரத்து குறைவால் காய்கறிகளின் விலை சற்று உயர்ந்தது
x
தினத்தந்தி 10 April 2022 1:36 AM IST (Updated: 10 April 2022 1:36 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் வரத்து குறைவால் காய்கறிகளின் விலை சற்று உயர்ந்தது

நாஞ்சிக்கோட்டை;
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள உழவர் சந்தைக்கு திருவையாறு, கண்டியூர், நடுக்காவேரி, கண்டிதம்பட்டு, மருங்குளம், வேங்கராயன்குடிகாடு, பொன்னாவரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வசிக்கும் தோட்ட சாகுபடி செய்யும் விவசாயிகள் தினசரி அதிகாலையிலேயே சந்தைக்கு காய்கறிகளை கொண்டு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். கடந்த சில தினங்களாக இங்கு 16 டன் காய்கறி விற்பனைக்காக வந்து கொண்டு இருந்தது. ஆனால் நேற்று திடீரென்று அதன் வரத்து 15 டன்னாக குறைந்தது. இதனால் சந்தையில் நேற்று காய்கறி விலை சற்று உயர்ந்தது.
நேற்று கத்தரிக்காய் கிலோ ரூ.24 மற்றும் 28-க்கும், வெண்டைக்காய் ரூ.38-க்கும், அவரைக்காய் ரூ.48-க்கும், தக்காளி ரூ.20-க்கும் கேரட் கிலோ ரூ.58-க்கும், பீட்ரூட் ரூ.30-க்கும், சவ்சவ் மற்றும் முட்டைக்கோஸ் தலா  ரூ.18-க்கும், கருணைக்கிழங்கு ரூ.30-க்கும், பரங்கிக்காய் மற்றும் பூசணிக்காய் தலா ரூ24-க்கும், முள்ளங்கி ரூ.28-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரத்தை விட நேற்று காய்கறிகள் சற்று கூடுதலாக விற்பனை செய்யப்பட்டது.

Next Story