பள்ளி ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை
மகனை கணவர் அழைத்து சென்றதால் பள்ளி ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
மேட்டூர்:-
மேட்டூர் அடுத்த புதுசாம்பள்ளி சி.எஸ்.நகர் பகுதியை சேர்ந்தவர் குமாரி (வயது 52). ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருடைய கணவர் சரவணன். இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். குமாரி, தனது மகனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சரவணன் தனது மகளை தன்னுடன் அழைத்துச் சென்றார். இதனால் மனமுடைந்த குமாரி வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே 2 நாட்களாக வீடு திறக்காததால் சந்தேகத்தின்பேரில் குமாரியின் தந்தை செல்வம் கருமலைக்கூடல் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வீட்டுக்குள் சென்று பார்த்த போது குமாரி, இறந்து கிடந்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story