சேலம் வழியாக கேரளா சென்ற ரெயிலில் 22 கிலோ கஞ்சா பறிமுதல்


சேலம் வழியாக கேரளா சென்ற ரெயிலில் 22 கிலோ கஞ்சா பறிமுதல்
x
தினத்தந்தி 10 April 2022 1:45 AM IST (Updated: 10 April 2022 1:45 AM IST)
t-max-icont-min-icon

சேலம் வழியாக கேரளா சென்ற ரெயிலில் 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சூரமங்கலம்:-
சேலம் வழியாக கேரளா சென்ற ரெயிலில் 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரெயில்களில் சோதனை
சேலம் வழியாக செல்லும் ெரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்கும் விதமாக சேலம் ெரயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தனிப்படை அமைத்து ெரயில்களில் சோதனை நடத்தி வருகின்றனர், இந்த நிலையில் சேலம் ெரயில்வே போலீசார் மற்றும் மதுரை மாநகர போலீசார் கமிஷனர் செந்தில்குமாரின் சிறப்பு தனிப்படையினர் இணைந்து ஐதராபாத்- திருவனந்தபுரம் சபரி எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 17230) ெரயிலில் சோதனை நடத்தினர்.
சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் நோக்கி ரெயில் வந்து கொண்டு இருந்த போது, எஸ் 5 பெட்டியில் போலீசார் சோதனை செய்தபோது சந்தேகப்படும் படியாக 3 பேர் அமர்ந்து இருந்தனர். அவர்கள் கணவன், மனைவி மற்றும் அவர்களது மகன் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் வைத்திருந்த ஒரு பெரிய பையை சோதனை செய்த போது அதில் 13 பொட்டலங்களில் 22 கிலோ கஞ்சா இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது
தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் மதுரை முத்துப்பட்டியை சேர்ந்த கண்ணன் (வயது 45), அவருடைய மனைவி சித்ரா (40), அவர்களது 15 வயது மகன் என்பதும், அவர்கள் ஆந்திராவில் இருந்து 22 கிலோ கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது, இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து, பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை சேலம் ெரயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story