தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சையில் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்;
தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழகம் சார்பில் நேற்றுமாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் முதல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் தங்கமணி, அன்புசேகரன், சாமிதுரை, விஜயகுமார், பரமசிவம், பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சேகர் வரவேற்றார்.
செயல் தலைவர் சுப்பிரமணியம், மண்டல செயலாளர்கள் மணியரசன், ஆரோக்கியராஜூ, மாநில துணைத் தலைவர்கள் இளவரசு, ஜெயச்சந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், பள்ளி மாணவர்கள் நடத்தையில் ஏற்படும் விரும்பதகாத மாற்றங்கள், ஒழுக்க சீர்கேடுகள் காரணமாக பள்ளிகளில் அசம்பாவிதங்கள் நடப்பதும் அதற்கு தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் பொறுப்பாளிகளாக்கப்பட்டு, மாணவர்களாலும், சமூக விரோதிகளாலும் மிரட்டப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர் நிகழ்வாக உள்ளது.எனவே, மாணவர்களை நெறிபடுத்தவும், ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியும், ஆசிரியர்களின் பணிபாதுகாப்புக்கும், மாணவர்களை நெறிப்படுத்தவும் புதிய நெறிமுறைகள் அடங்கிய அரசாணையை வெளியிட வேண்டும்.
அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களையும், சலுகைகளையும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் நீட்டித்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முடிவில் மாவட்ட அமைப்பு செயலாளர் வடிவேல் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story