தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 10 April 2022 1:50 AM IST (Updated: 10 April 2022 1:50 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு நன்றி
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா சோமரசம்பேட்டை பஞ்சாயத்துக்குட்பட்ட வாசன் சிட்டியில் புதிதாக ரேஷன்கடை அமைக்க வாடகைக்கு இடம் கிடைத்தது. ஆனால் கடை திறக்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த ரேஷன் கடையை திறந்தனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
பொதுமக்கள், சோமரசம்பேட்டை, திருச்சி.
மின் பெட்டியால் விபத்து அபாயம்
திருச்சி பாளையம் பஜார் மெயின் ரோட்டில் உள்ள மின்கம்பத்தில் உள்ள மின்பெட்டி மிகவும் தாழ்வாகவும், திறந்த நிலையிலும் உள்ளது. பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அதிகளவில் இப்பகுதியை கடந்து சென்று வரும் நிலையில் திறந்த நிலையில் மின்பெட்டி உள்ளதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உயிரிழப்பு ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராம், திருச்சி.
குப்பைகளால் சுகாதார சீர்கேடு 
திருச்சி வயலூர் ரோடு இரட்டைவாய்க்கால் பகுதியில் குப்பைகள் அதிகளவில் தேங்கி கிடக்கிறது. குப்பைத்தொட்டி இல்லா மாநகரம் என்ற பெருமை பெற்ற திருச்சியில் நீர் நிலைக்கு அருகில் இவ்வாறு குப்பை குவியல் தேங்கி இருப்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த குப்பைகளை உடனுக்குடன் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜா, திருச்சி.
குடிநீரில் கலக்கும் கழிவுநீர்
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட மேலசிந்தாமணி பழைய கரூர் ரோட்டில் உள்ள நாட்டார் சந்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கடந்த 4 நாட்களாக சாக்கடை கலந்த குடிநீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும், இந்த தண்ணீரை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகராஜன், திருச்சி.
குண்டும் குழியுமான சாலை
திருச்சி ஸ்ரீரங்கம் தாலுகா, ஓலையூர், பி.ஜி. நகரில் உள்ள சாலைகள் மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு இந்த சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மணிகண்டன், ஸ்ரீரங்கம், திருச்சி.

Next Story