தொழிலாளி கொலையில் மேலும் ஒருவர் கைது
மேட்டூர் அருகே தொழிலாளி கொலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மேட்டூர்:-
மேட்டூர் அருகே கருமலைக்கூடல் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 26). வெல்டிங் பட்டறை தொழிலாளி. இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கடந்த 2015-ம் ஆண்டு பழனிசாமி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ராஜேஷ் தொடர்புடையவர். எனவே அந்த கொலைக்கு பழிக்குப்பழியாக ராஜேஷ் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ராஜேஷ் கொலை தொடர்பாக கருமலைக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து லல்லுபிரசாத், மதியழகன் உள்பட 5 பேரை கைது செய்தனர். இதற்கிடையே ராஜேஷ் கொலை தொடர்பாக தலைமறைவாக இருந்த கார்த்தி (20) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
Related Tags :
Next Story