விஷம் குடித்து பெண் தற்கொலை


விஷம் குடித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 10 April 2022 2:34 AM IST (Updated: 10 April 2022 2:34 AM IST)
t-max-icont-min-icon

விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள கோரைக்குழி தெற்குத்தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 26). இவரது மனைவி சித்ரா(21). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் மணிகண்டன் கடந்த 6 மாதங்களாக வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் கோரைக்குழியில் உள்ள வீட்டில் தனது மாமியார் சுசீலாவோடு சித்ரா வசித்து வந்தார். கடந்த வாரம் சித்ராவை சுசீலா விவசாய நிலத்தில் கடலை செடி பிடுங்குவதற்கு அழைத்துச் சென்றதாகவும், இதையடுத்து சித்ராவிற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் சுசீலாவிற்கும், சித்ராவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. 
இதில் மனமுடைந்த சித்ரா வீட்டில் யாரும் இல்லாதநேரத்தில் விவசாய நிலத்திற்கு தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்துவிட்டு வீட்டில் இறந்து கிடந்தார். இதனைக் கண்ட அக்கம், பக்கத்தினர் விக்கிரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு சென்ற போலீசார், சித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசில் சித்ராவின் தாய் அன்பரசி, தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கொடுத்த புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் மற்றும் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சித்ராவிற்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் மட்டுமே நிறைவடைந்து இருப்பதால் உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளமும் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறார்.

Next Story