சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற தனியார் விடுதி வார்டன் கைது


சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற தனியார் விடுதி வார்டன் கைது
x
தினத்தந்தி 10 April 2022 2:34 AM IST (Updated: 10 April 2022 2:34 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற தனியார் விடுதி வார்டன் கைது செய்யப்பட்டார்.

ஜெயங்கொண்டம்:

பலாத்காரம் செய்ய முயற்சி
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள காமரசவல்லி சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் மோகன்ராஜ்(வயது 20). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவன விடுதியில் வார்டனாக பணியாற்றி வருகிறார். இவர் திருமானூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை காதலித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மோகன்ராஜ், அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதற்கு சிறுமி எதிர்ப்பு தெரிவித்து திட்டியதாக கூறப்படுகிறது. இதையறிந்த மோகன்ராஜின் தந்தை முருகேசன், அந்த சிறுமியை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
தந்தை மீது வழக்கு
இதுகுறித்து சிறுமியின் தாய் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் மோகன்ராஜ் மற்றும் சிறுமியிடம் இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை நடத்தினார். இதையடுத்து மோகன்ராஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிறுமியை திட்டி கொலை மிரட்டல் விடுத்த மோகன்ராஜின் தந்தை முருகேசன் மீது வழக்குப்பதிந்து, அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story