பெட்ரோல்-டீசல் விலையில் 3-வது நாளாக மாற்றமில்லை
பெட்ரோல்-டீசல் விலையில் 3-வது நாளாக மாற்றமில்லை.
பெரம்பலூர்:
பெட்ரோல், டீசல் விலை கடந்த அக்டோபர் மாதம் வரை வரலாறு காணாத உச்சத்தில் இருந்து வந்த நிலையில், அதன் பிறகு விலை சற்று குறைய தொடங்கியது. இந்த நிலையில் கடந்த மாதம் (மார்ச்) இறுதியில் இருந்து மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 30-ந்தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 107 ரூபாய் 56 காசுக்கு விற்று கொண்டிருந்த இருந்த நிலையில், அதற்கடுத்த நாட்களில் லிட்டருக்கு 76 காசு அதிகரித்து, ஒரு லிட்டர் பெட்ரோல் 108 ரூபாய் 32 காசுக்கு விற்பனை ஆனது. இதேபோல் கடந்த 30-ந்தேதி டீசல் விலை லிட்டருக்கு 97 ரூபாய் 65 காசுக்கு விற்பனை ஆனது. அதற்கு அடுத்த நாட்களில் லிட்டருக்கு 76 காசு உயர்ந்து, ஒரு லிட்டர் டீசல் 98 ரூபாய் 41 காசுக்கும் விற்பனை ஆனது. இந்நிலையில் கடந்த 5-ந் தேதி பெட்ரோல் ஒரு லிட்டர் 110 ரூபாய் 96 காசுக்கும், டீசல் 101 ரூபாய் 7 காசுக்கும், ஸ்பீடு பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.113.42-க்கும் விற்பனை ஆனது. மறுநாள்(6-ந் தேதி) பெட்ரோல் 76 காசுகள் உயர்ந்து பெட்ரோல் 112 ரூபாய் 72 காசுக்கும், டீசல் 76 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் 101 ரூபாய் 83 காசுக்கும், ஸ்பீடு பெட்ரோல் 76 காசுகள் உயர்ந்து 114 ரூபாய் 18 காசுகளுக்கு விற்பனை ஆனது. அதனை தொடர்ந்து கடந்த 3 நாட்களாக பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றமில்லாமல் அதே விற்பனை ஆனது.
Related Tags :
Next Story