பெங்களூருவில் 15 வயது சிறுமியை மிரட்டி 4 மாதங்களாக கூட்டு பலாத்காரம்
ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி 15 வயது சிறுமியை 4 மாதங்களாக கூட்டு பலாத்காரம் செய்த காதலன் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பெங்களூரு:
ஆபாச வீடியோவை காட்டி...
பெங்களூரு எலகங்கா அருகே ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு 15 வயது மகள் உள்ளாள். இந்த நிலையில் அந்த சிறுமிக்கும், 25 வயது வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் உண்டானது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருந்தது. இதனால் அந்த சிறுமியும், வாலிபரும் அடிக்கடி சந்தித்து கொண்டனர். இந்த நிலையில் அந்த வாலிபர், சிறுமியை தனது நண்பர் ஒருவர் வீட்டிற்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது.
இதை அந்த சிறுமிக்கு தெரியாமல் தனது நண்பர் ஒருவர் மூலம் வாலிபர் வீடியோ எடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த உல்லாச வீடியோவை காட்டி சிறுமியை மிரட்டி வாலிபர் பணம் பறித்து வந்து உள்ளார். மேலும் அத்துடன் சிறுமியுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை தனது நண்பர்களுக்கு வாலிபர் அனுப்பி உள்ளார்.
கூட்டு பலாத்காரம்
இதையடுத்து அந்த சிறுமியை வாலிபரின் நண்பர்களான 2 சிறுவர்கள் உள்பட 7 பேர் உனது ஆபாச வீடியோ எங்களிடம் உங்களது என்று கூறியதுடன், அந்த வீடியோவை வெளியிடாமல் இருக்க தங்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்றும் மிரட்டி அந்த சிறுமியை 4 மாதங்களாக கற்பழித்து வந்து உள்ளனர். இந்த நிலையில் அந்த சிறுமி தனது வீட்டில் திடீரென கண்ணீர்விட்டு கதறி அழுது உள்ளாள். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் அவளிடம் விசாரித்தனர்.
அப்போது நடந்த சம்பவங்களை சிறுமி கூறியுள்ளாள். இதனால் அதிர்ந்த சிறுமியின் பெற்றோர் சம்பவம் குறித்து எலகங்கா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியின் காதலன், 2 சிறுவர்கள் உள்பட 8 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story