குற்றாலநாத சுவாமி கோவிலில் சித்திரை விசு தேரோட்டம்
குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் சித்திரை விசு தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தென்காசி, ஏப்.10-
தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் சித்திரை விசு திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் சிறப்பு பூஜைகள், சுவாமி- அம்பாள் வீதி உலா ஆகியவை நடைபெற்று வருகிறது. விழாவின் 5-ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை 5.20 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளல் நடைபெற்றது.
காலை 8.45 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. முதலில் கணபதி தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. தொடர்ந்து முருகன் தோ், குற்றாலநாத சுவாமி தேர், குழல்வாய் மொழியம்மை தேர் ஆகியவற்றை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
விழாவில் வருகிற 11-ந் தேதி நடராஜ மூர்த்திக்கு தாண்டவ தீபாராதனை, 12-ந் தேதி சித்திர சபையில் நடராஜ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடக்கிறது. 14-ந் தேதி காலை 9.20 மணிக்கு சித்திரை விசு தீர்த்தவாரி நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை தூத்துக்குடி இணை ஆணையர் அன்புமணி, கோவில் தக்கார் சங்கர், நிர்வாக அதிகாரி கண்ணதாசன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story