புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 10 April 2022 3:57 AM IST (Updated: 10 April 2022 3:57 AM IST)
t-max-icont-min-icon

புகார் பெட்டி

பயணிகள் நிழற்குடை வேண்டும்
பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட திட்டுவிளையில் பஸ் நிறுத்தம் உள்ளது. ஆனால் இந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பஸ்சுக்காக காத்து நிற்கும் பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் வெயில் மற்றும் மழை காலங்களில் மிகுந்த சிரமம் அடைகிறார்கள்.  எனவே நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாபு உசைன், திட்டுவிளை.

குடிநீர் வரவில்லை 
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உள்பட்ட 29-வது வார்டு    ஈஸ்வரபுரம் அம்மன் குளம் தெருவில் முறையாக குடிநீர் வருவதில்லை. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். குடிநீருக்காக குடங்களை தூக்கி கொண்டு அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே முறையாக குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-சிவக்குமார், கேட்டார்.

பூட்டி கிடக்கும் நூலகம் 
மாங்கோடு பேரூராட்சிக்கு உட்பட பாக்கோட்டில்  நூலகம் ஒன்று உள்ளது. இந்த நூலகம் பல ஆண்டுகளாக பூட்டியே  கிடக்கிறது. இதனால் அந்த பகுதி மாணவ- மாணவிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். மேலும் நூலக கட்டிடம் பராமரிப்பு இன்றி சிதலமடைந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நூலகத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-தேவதாஸ், மாங்கோடு.

மழைநீர் வடிகால் வசதி வேண்டும் 
திருவட்டார்-குலசேகரம் சாலையில் புத்தன்கடை பகுதியில் முறையான மழைநீர் வடிகால் வசதி இல்லை.  மழைக்காலங்களில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து சாலையில் செல்கிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே வடிகால் ஓடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சேம் மார்டின், புத்தன்கடை

சுகாதார சீர்கேடு
வடக்கு தாமரைகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்குறும்பொத்தையில் ஒரு கிறிஸ்தவ ஆலயத்தின் முன்பு சிலர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் கொசு தொல்லை அதிகரித்து உள்ளது. மேலும் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே, அந்த பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றுவதுடன், மேற்கொண்டு குப்பைகள் கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-கலா, கல்குறும்பொத்தை.




Next Story