திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு


திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 10 April 2022 4:29 AM IST (Updated: 10 April 2022 4:29 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் மழை நீடித்து வருகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் வெற்றப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் மழை நீடித்து வருகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் வெற்றப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
மழை
குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நாகர்கோவிலில் நேற்று மாலை 3.30 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடித்தது. இடையிடையே இடி, மின்னலும் இருந்தது. மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடி சென்றனர்.
இதே போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் மழையின் காரணமாக வெள்ளம் கொட்டுகிறது. 
முன்னதாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் மிதமாகப்பாய்ந்தது. இதனால் நேற்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து திற்பரப்பு அருவியில் குளித்து மகிழ்ந்தனர். அவ்வப்போது சாரல் மழையும் பெய்ததால் சுற்றுலா பயணிகள் குதூகலமடைந்தனர். 
மழை அளவு
குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பூதப்பாண்டி-4.2, சுருளகோடு-31.2, பாலமோர்-18.4, இரணியல்-22, ஆனைகிடங்கு-10.2, குளச்சல்-8.2, குருந்தன்கோடு-15.8, அடையாமடை-9, கோழிப்போர்விளை-6, புத்தன்அணை-15.6, திற்பரப்பு-6.6 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.
இதே போல அணை பகுதிகளை பொறுத்த வரையில் பேச்சிப்பாறை-9, பெருஞ்சாணி-46.6, சிற்றார் 1-16.8, சிற்றார் 2-16, மாம்பழத்துறையாறு-2.4 என்ற அளவில் மழை பெய்திருந்தது.
அணைகளுக்கு நீர்வரத்து 
மழை காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 242 கனஅடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 88 கனஅடி தண்ணீரும், சிற்றார் 1 அணைக்கு வினாடிக்கு 12 கனஅடி தண்ணீரும், சிற்றார் 2 அணைக்கு வினாடிக்கு 23 கனஅடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.

Next Story