ஹூக்கா போதை பாரில் வேலை செய்த 4 பேர் கைது
ஹூக்கா போதை பாரில் வேலை செய்த 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை புரசைவாக்கம் பிரிக்ளின் சாலையில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஹூக்கா புகையிலை போதை பார் இயங்கிவருவதாக கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கார்த்திகேயனுக்கு தகவல் வந்தது. அதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு இருந்த ராயப்பேட்டையை சேர்ந்த ரமேஷ் (வயது 26), நேபாளத்தை சேர்ந்த சுமித் (22), கிஷோர் (21), டொரென்ரா (28) மற்றும் வாடிக்கையாளர்கள் என 20 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து பாரிலிருந்து அவர்கள் பயன்படுத்திய போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், வாடிக்கையாளர்களை எச்சரித்து அனுப்பினர்.
மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பிராட்வேயை சேர்ந்த பாரின் உரிமையாளர் பெரோஸ் (40) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story