இல்லம் தேடி கல்வி திட்டம் நாட்டிற்கு ஒரு முன்னோடி திட்டம்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
இல்லம் தேடி கல்வி திட்டம் நாட்டிற்கு ஒரு முன்னோடி திட்டம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தை சோ்ந்த கார் பந்தய வீரர் ராகுல் ரங்கசாமி. இவர் 7 முறை தேசிய அளவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இவருக்கு திருச்சி மாவட்ட ரோட்டரி சங்கம் சார்பில் மாமல்லபுரத்தில் ஒரு ஓட்டலில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துக்கொண்டு கார் பந்தய வீரரை பாராட்டினார்.
அப்போது அவர் கூறியதாவது:- தமிழக முதல்-அமைச்சரின் ஆலோசனையின்படி இல்லம் தேடி கல்வி திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் நாட்டிற்கு தமிழ்நாடு முன்னோடியாக திகழ்கிறது. கொரோனாவால் 2 வருடமாக மாணவர்களுக்கு கல்வி கற்பதில் இடைவெளி ஏற்பட்டு விட்டது. அதனை போக்குவதற்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளிகள் தோறும் நடத்தி வருகிறோம், இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story