பாலூர் கிராமத்தில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்


பாலூர் கிராமத்தில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்
x
தினத்தந்தி 10 April 2022 6:57 PM IST (Updated: 10 April 2022 6:57 PM IST)
t-max-icont-min-icon

பாலூர் கிராமத்தில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நடந்தது.

ஆம்பூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாலூர் கிராமத்தில் அமைந்துள்ள தூய பவுல் ஆலய திருச்சபையில் குருத்தோலை ஞாயிறு நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் புத்தாடை மற்றும் வெள்ளை உடைகளை அணிந்து கைகளில் குருத்தோலைகளை ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக ஓசன்னா ஓசன்னா என்ற பாடல் பாடிக் கொண்டு ஊர்வலமாக வந்தனர். பின்னர் திருச்சபையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சபை போதகர் ஆனந்தராஜன் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டார். இதில் வழக்கறிஞர் சார்லஸ் ஜெபக்குமார், சபை மணியம் மோகன், பஜனை தலைவர் மனோகரன், கோவில் பிள்ளை சாமுவேல் மற்றும் தூய பவுல் ஆலய திருச்சபை கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

Next Story