நாகூர், கீழ்வேளூர் பகுதிகளில் வெயிலின் தாக்கத்தை தணித்த மழை


நாகூர், கீழ்வேளூர் பகுதிகளில் வெயிலின் தாக்கத்தை தணித்த மழை
x
தினத்தந்தி 11 April 2022 12:15 AM IST (Updated: 10 April 2022 7:26 PM IST)
t-max-icont-min-icon

நாகூர், கீழ்வேளூர் பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் தணிந்தது.

நாகூர்:-

நாகூரில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. தினமும் பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாடவே தயங்கும் அளவுக்கு வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இந்த நிலையில் நேற்று காலை திடீரென மழை பெய்தது. முன்னதாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்றும் வீசியது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே வாட்டி வதைத்த வெயிலின் தாக்கத்தை இந்த மழை வெகுவாக தணித்து விட்டதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். தெத்தி, மேல நாகூர், வடகுடி, பாலக்காடு, முட்டம், ஆகிய ஊர்களிலும் பரவலாக மழை பெய்தது. 
அதேபோல் கீழ்வேளூர் தேவூர், நீலப்பாடி, அத்திப்புலியூர், குருமணாங்குடி, குருக்கத்தி, கூத்தூர், வெண்மணி, பட்டமங்கலம், ராதாமங்கலம், இலுப்பூர், வடக்காலத்தூர், அகரகடம்பனூர், ஆழியூர், பொரவச்சேரி, சிக்கல், சிக்கவலம் சங்கமங்கலம், ஆவராணி, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. நேற்று காலையிலும் மழை பெய்தது. இதன் காரணமாக வெயிலின் தாக்கம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. 

Next Story