ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்; வாலிபர் கைது
ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் வாலிபர் கைது
கூடலூர்
கூடலூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸ் துணை சூப்பிரண்டு குமாருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிதுரை தலைமையிலான போலீசார் ரோந்து பணியை மேற்கொண்டனர்.
அப்போது மேல் கூடலூரில் தனியார் ஓட்டல் அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர். மேலும் அவர் கையில் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அதை பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சாவை வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீநீத்(வயது 22) என்பவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story