50 அடி பள்ளத்தில் கார் பாய்ந்தது


50 அடி பள்ளத்தில் கார் பாய்ந்தது
x
தினத்தந்தி 10 April 2022 8:03 PM IST (Updated: 10 April 2022 8:03 PM IST)
t-max-icont-min-icon

ேகாத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் 50 அடி பள்ளத்தில் கார் பாய்ந்தது. இதில் டிரைவர் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

கோத்தகிரி

ேகாத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் 50 அடி பள்ளத்தில் கார் பாய்ந்தது. இதில் டிரைவர் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

பள்ளத்தில் பாய்ந்த கார்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியை சேர்ந்தவர் சுகுமாரன்(வயது 63). இவர் நேற்று தனது உறவினர்களான சரவணன்(54), லதா(54), லட்சுமி(44), தினேஷ்(30) மற்றும் 2 குழந்தைகளுடன் வாடகை காரில் ஊட்டிக்கு சுற்றுலா வந்தார். காரை ராஜா(35) என்பவர் ஓட்டினார். 

ஊட்டி, கோத்தகிரி பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்துவிட்டு இன்று மாலை 4 மணிக்கு சொந்த ஊருக்கு புறப்பட்டனர். கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் தட்டப்பள்ளம் பகுதியில் உள்ள குறுகிய வளைவில் திரும்பியபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை கார் இழந்தது. தொடர்ந்து சாலையோரம் உள்ள 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. 

5 பேர் படுகாயம்

இந்த விபத்தில் காருக்குள் இருந்த அனைவரும் வெளியே வர முடியாமல் தவித்தனர். இதை அந்த வழியாக சென்றவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே பள்ளத்தில் இறங்கி அவர்களை மீட்டனர். இதில் சுகுமாரன், சரவணன், தினேஷ், லதா, ராஜா ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. மற்றவர்கள் லேசான காயத்துடன் தப்பினர். 

இதையடுத்து அவர்கள் 5 பேரையும் கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story