கேரளாவுக்கு ரெயில் மூலம் கடத்த முயன்ற 175 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் முதியவர் கைது
நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் மூலம் கேரளாவுக்கு கடத்த முயன்ற 175 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
நாகர்கோவில்,
நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் மூலம் கேரளாவுக்கு கடத்த முயன்ற 175 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ரேஷன் அரிசி
நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் நேற்று அதிகாலை 3.45 மணி அளவில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபு தலைமையிலான போலீசார் ரெயில் நிலையத்தில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது 1-வது பிளாட்பாரத்தில் சில மூடைகள் கேட்பாரற்று கிடந்தன. அந்த மூடைகளை போலீசார் திறந்து பார்த்தனர். அப்போது அதில் 175 கிலோ ரேஷன் அரிசி இருந்ததும், அவற்றை பரசுராம் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் கேரளாவுக்கு கடத்த முயன்றதும் தெரிய வந்தது.
கைது
அதைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி, ேரஷன் அரிசி மூடைகளை கேரளாவுக்கு கடத்துவதற்காக வைத்து இருந்த பாறசாலையை சேர்ந்த புஷ்பராஜ் (வயது 64) என்பவரை கைது செய்தனர். மேலும் 175 கிலோ ரேஷன் அரிசிையயும் பறிமுதல் செய்தனர்.
அதைத்தொடர்ந்து ரெயில்களிலும் ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா? என்றும் போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள்.
Related Tags :
Next Story