பக்த ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி விழா


பக்த ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி விழா
x
தினத்தந்தி 10 April 2022 8:19 PM IST (Updated: 10 April 2022 8:19 PM IST)
t-max-icont-min-icon

கீழ்பென்னாத்தூர் பக்த ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி விழா

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் மின்வாரிய அலுவலக முகப்பில் உள்ள பக்த ஆஞ்சநேயர் கோவிலில் இன்று ராமநவமியையொட்டி ஆஞ்சநேயருக்கு பலவகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

அதன் பிறகு துளசிமாலை, வெற்றிலை மாலை, வடைமாலை அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. .

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். துளசி, தீர்த்தம், செந்தூரம், நைவேத்திய பிரசாதம் வழங்கப்பட்டது.

 ராமநவமியையொட்டி கோவில் முழுவதும் மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. 

இதேபோல் போளூர் கன்னிகாபரமேஸ்வரி தெருவில் உள்ள பட்டாபி ராமர் பஜனை மந்திராலயத்தில் ராம நவமி விழா நடந்தது. அதையொட்டி, ராமருக்கு 26 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் ெசய்யப்பட்டது.

 அதைத்தொடர்ந்து அலங்காரம், கலச ஸ்தாபனம், தீபாராதனை நடந்தது.  இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பக்தி பஜனை பாடல்கள், நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களை பாடினர். 

விழா ஏற்பாடுகளை போளூர் நகர ஆரிய வைஸ்ய சமாஜத்தினர் செய்திருந்தனர். 

Next Story