நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்
வாய்மேடு அருகே கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்தன.
வாய்மேடு:-
நாகை மாவட்டம் வாய்மேடு அருகே ஆயக்காரன்புலம் 3-ம் சேத்தியில் சம்பா பருவ அறுவடை பணிகளையொட்டி நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. இதுவரை 20 ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யபட்டுள்ளது. இங்கு திறந்த வெளியில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த மழை காரணமாக திறந்தவெளியில் உள்ள நெல் மூட்டைகள் நனைந்து சேதம் அடைந்துள்ளன. இந்த நிலையில் சிரமப்பட்டு விளைவித்த நெல்லை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story