பழனி முருகன் கோவிலில் தயாரிக்கப்படும் குங்குமம், திருநீறை பிற கோவில்களுக்கு வழங்கும் திட்டம் அமைச்சர் சேகர்பாபு காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்
பழனி முருகன் கோவிலில் தயாரிக்கப்படும் குங்குமம், திருநீறை பிற கோவில்களுக்கு வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
பழனி:
பழனி முருகன் கோவிலுக்கு தேவையான திருநீறு, குங்குமம் ஆகியவை கோவில் நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் திருநீறு, குங்குமம் ஆகியவை பழனி உபகோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்தநிலையில் பழனியில் தயாரிக்கப்படும் திருநீறு, குங்குமத்தை பிற மண்டலங்களில் உள்ள கோவில்களுக்கு வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியில், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னையில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் கலந்துகொண்டு, புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் செந்தில்குமார், நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து கோவில் அலுவலர்கள் கூறுகையில், பழனியில் தயாரிக்கப்படும் குங்குமம், திருநீறு ஆகியவை மதுரை, தஞ்சாவூர், கோவை, சேலம், ஈரோடு ஆகிய மண்டலங்களில் உள்ள கோவில்களுக்கு தேவைக்கு ஏற்ப அனுப்பி வைக்கப்பட உள்ளது என்றனர்.
Related Tags :
Next Story